ஆவடி - Aavadi

ஆவடி: இணையதள குற்றங்கள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூட்டம்

ஆவடி: இணையதள குற்றங்கள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூட்டம்

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்களின் தலைமையில் இணைய வழி குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் இழக்கும் பண மதிப்பு பெருமளவில் நடந்து வருகின்ற நிலையில், அப்பணத்தை கண்டறியும் பொருட்டும், அப்பணத்தை மீட்டு உரியவர்களிடம் அளிக்கும் நடைமுறையில் வங்கிகளில் சம்பந்தப்பட்ட வழிமுறைகளை கண்டறிய, அதனை துரிதப்படுத்தும் விதமாக அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளின் (Nodal Officers) சட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள Conference Hall ல் நடைபெற்றது.  இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு இணைய வழி குற்றங்கள் பற்றியும், வங்கி கணக்குகள் சம்பந்தமாக ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் விரிவான விவாதங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் SOP (Standard Operating Procedure) பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதில் கூடுதல் துணை ஆணையாளர் திரு. அர்னால்ட் ஈஸ்டர் அவர்கள், இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், 35 வங்கிகளிலிருந்து 51 நோடல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా