கும்மிடிப்பூண்டி அருகே கூடுதல் வகுப்பு முடித்து திரும்பிய பள்ளி மாணவன் சாலையில் மழங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் தனியாருக்கு சொந்தமான பிரபலமாக செயல்பட்டு வரும் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆந்திர மாநில எல்லையோர பகுதிகள் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.
அவ்வாறு இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வரும் ஆந்திர மாநிலம் காரூரைச்சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் நந்தா (16) என்பவர் நேற்று மாலை கூடுதல் வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பள்ளிவாசலின் அருகே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்த நிலையில் அவசரகதியில் அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் எளாவூர் சோதனை சாவடி மருத்துவமனையில் சோதித்தபோது வரும் வழிலேயே மாணவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது