பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கும்போதும், நாலந்தா மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு குடித்துவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிற்க முடியாமல் தள்ளாடிய அவர்களை பார்த்த மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர்களில் ஒருவர் மது போதையில் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த கான்ஸ்டபிள் திருப்பி அனுப்பப்பட்டு மற்றவர்கள் ஆசிரியர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.