தஞ்சையில் ஆசிரியர் ரமணியை, அவரது காதலன் மதன்குமார், நவ.20 அன்று பள்ளிக்குள் புகுந்து குத்தி கொலை செய்தார். பின்பு கைது செய்யப்பட்ட மதன்குமார் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரமணி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால், தனக்கு கிடைக்காத அவர், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும், கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன், அப்போது ஆசிரியர்கள் வந்து பிடித்துவிட்டனர் என மதன் கூறியுள்ளார்.