ஆவடி - Aavadi

கவரைப்பேட்டை: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

திருவள்ளூர் அருகே விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம் புரண்டதோடு பலர் சிக்கி காயம் அடைந்தனர். கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து பீகார் நோக்கி சென்னை வழியாக சென்ற தர்பங்கா விரைவு ரயில் நேற்று(அக்.11) மைசூரில் இருந்து காலை 10. 30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு பொன்னேரியை கடந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே வந்த போது சுமார் 8: 30 மணி அளவில் விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 7 குளிர்சாதன பெட்டிகள் தடம் புரண்டதில் ரயில் பெட்டிகளும் தீப்பிடித்து எறிந்தன. பலர் சிக்கி காயம் அடைந்தனர். அதோடு சரக்கு ரயில் தீப்பற்றியது. இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்டமாக தகவல் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా