திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி கலந்தாய்வு கூட்டம் கவரப்பேட்டையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணி மாநில இணை செயலாளரான குமரி விஜயகுமார், மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா உள்ளிட்ட திமுக மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மகளிர் அணி மாநில இணை செயலாளர் குமரி விஜயகுமார், சில இடங்களில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் பெண்களை அமரகூட விடமாட்டார்கள் என்றும் நிற்க வைப்பார்கள். அடிமை மாதிரி நடத்துவார்கள் அவர்களிடம் நான் சண்டை கூட போட்டுள்ளேன். ஆனால் அந்த நிலை திருவள்ளுவர் கிழக்கு மாவட்டத்தில் இல்லை என்றும் அதே நேரத்தில் சிறிது சுனக்கம் மட்டுமே உள்ளது.
அதாவது, பெண்களுக்கு ஒப்பந்த பணிகளை ஒதுக்கீடு செய்ய முன்வர கட்சி முன்வர வேண்டும். சிறிய அளவிலான ஒப்பந்தப் பணிகளையாவது மகளிருக்கு மாவட்டச் செயலாளர் ஒதுக்க வேண்டும் என பேசினார். ஒப்பந்த பணிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன் திமுக மகளிர் அணியினரை மற்ற மாவட்ட செயலாளர்கள் நிற்க வைத்து அடிமை போல் நடத்துவதாக பேசி நாம் சுய மரியாதை இயக்கம் அதை மறக்க கூடாது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.