பேட்டை: வக்பு சொத்துக்களை பாதுகாக்ககோரி ஆர்ப்பாட்டம்
வக்பு சொத்துகளை பாதுகாக்ககோரி நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (அக்.,5) ரஹ்மான் பேட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மண்டல செயலாளர் கனி, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.