போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

54பார்த்தது
எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இன்று (செப் 17) நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தாழை உசேன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் பர்கிட் யாசின், பொருளாளர் போத்தீஸ் முகம்மது பாபு, செயற்குழு உறுப்பினர் மஜீத் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் கனி கலந்து கொண்டார்.

இரத்த கொடையாளர்கள் கௌரவ நிகழ்ச்சி குறித்து மீளாய்வு நடைபெற்றது. தெற்கு மற்றும் வடக்கு பைபாஸில் நடைபெறும் சாலை பணிகளால் மக்கள் தினமும் அவதி புழுதி மணலால் சுவாசக் கோளாறு மாவட்ட நிர்வாகம் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், சாலை நடைபெறும் பணியில் தினமும் தண்ணீர் தெளித்து தூசி பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுண் கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்களை நியமிக்க ஆவணம் செய்திட வேண்டும்,

மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் மஞ்சள் காமாலை பரவிவருகிறது. சுகாதாரத்துறை போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுப் பாஷா நன்றி உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி