திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுதல் தடுப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கள ஆய்வு பணிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி காய்ச்சல் வார்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு 15 படுக்கைகள் கொசு வலையுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.