குடிநீரில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்

82பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி பேட்டையில் மாநகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு உள்ளது என தெருவில் உள்ள பொது குடிநீர் குழாயில் சோதனை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பேட்டை சுகாதார அலுவலர் முருகேசன் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீரில் கலக்கப்பட்டுள்ள குளோரின் அளவினை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த ஆய்வறிக்கையை ஆணையாளருக்கு சமர்ப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி