திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை ஏ. எஸ். பி பிரசன்னா குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஏராளமான மாணவர்கள் பேரணியில் பங்கேற்று முக்கிய வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.