ஆண்டிப்பட்டி
ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆட்சியர்
ஆண்டிபட்டியில் உள்ள மன மையத்தில் இன்று(செப்.18) பள்ளிக்கல்வித் துறை சார்பாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.