ICC சாம்பியன் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வரும் வங்க தேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி ஆரம்பம் முதலே சொதப்பி வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக டான்சித் ஹசன் 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை முகமது ஷமி, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.