கூகுல் பே மூலம், மின்சார கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி, பணம் செலுத்தினால், இனி அதற்கு கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு தலா ரூ.15 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தினால் மட்டுமே. வழக்கம்போல் வங்கிக் கணக்கை நேரடியாக இணைத்து, அதன் மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் கிடையாது.