முகத்தை பொலிவாக்கும் ஹோம் மேட் ஃபேஸ்பேக்கை வீட்டிலேயே செய்யலாம். ஒரு ஸ்பூன் கசகசாவை பசை பதம் வரும் வரை பால் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறும். இரசாயனங்கள் கலக்காமல் தயாரிப்பதால் ஒவ்வாமை பாதிப்புகளும் ஏற்படாது. அதிக பணம் செலவழித்து கடைகளில் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.