

பெரியகுளம்: இந்தி திணிப்பை ஏற்க முடியாது.. முன்னாள் அமைச்சர்
தேனி மாவட்டம் பெரியகுளம், மதுராபுரி பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இதில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என கூறியது குறித்து கேட்டதற்கு, மூன்று மொழிகளை படிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை, படிப்பவர்களை ஆதரிக்கிறோம் ஆனால் திணிப்பதை விரும்பவில்லை என அவர் கூறினார்.