தேனி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை சேதம் அவதிக்குள்ளாகும் பயணிகள்
தேனி நகராட்சிக்கு உட்பட்ட கர்னல் புதிய பேருந்து நிலையத்திற்கு அன்றாடம் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து அன்றாடும் 2000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகளின் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் பல வருடங்களாக சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் பேருந்துக்கு காத்திருக்கக்கூடிய பயணிகள் வெயிலில் வாடும் சூழ்நிலை உள்ளது. இதற்கு நகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்