திருமாவளவன் முதலமைச்சராகும் கனவெல்லாம் நடக்காது - எல்.முருகன்

70பார்த்தது
திருமாவளவன் முதலமைச்சராகும் கனவெல்லாம் நடக்காது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். இரட்டை வேடம் போடும் திருமாவளவன் எப்படி ஒரு தலித்தலைவராக இருக்க முடியும்? திருமாவளவனை ஒரு சின்ன கட்சியின், அமைப்புக்கான தலைவராகத்தான் பார்க்கிறேன்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி