சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் பால் குடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் இருக்கும். பாலில் அதிக கொழுப்பு உள்ளது. இருப்பினும், பால் ஆனது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பாலை தேர்வு செய்யலாம். குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சர்க்கரை நோயாளிகள் தேர்வு செய்வது சிறந்ததாகும்.