கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (21) டிரம்ஸ் இசைக்கலைஞராக இருந்தார். இவர் நேற்று (அக். 19) செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கேட்டை கடந்த போது திடீரென தண்டவாளத்தின் முன் அமர்ந்தார். இதையடுத்து ரயில் மோதியதில் விஜயக்குமார் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.