தெலங்கானா: ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பப் ஒன்றில் நேற்று (அக்.19) இரவு அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்நேரம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.