பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பல்சர் கைக்குகளின் விற்பனையை அதிகரிக்க பண்டிகைகால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்சர் 125 கார்பன் ஃபைபர், NS125, N150, பல்சர் 150, N160, NS160, NS200 மற்றும் N250 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை வாங்குவோர் ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகைகளை பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. HDFC கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 பிரத்யேக கேஷ்பேக் சலுகையும் உள்ளது.