பெங்களூரு: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணின் மொபைலில் சஞ்சய்குமார் என்ற சக ஊழியர் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அச்செயலி மூலம் மொபைலின் கேமராவை ஆன் செய்து இளம்பெண் குளிக்கும் வீடியோ, ஆபாச புகைப்படங்களை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதைகாட்டி தன்னை காதலிக்கும்படியும் இளம்பெண்ணை சஞ்சய்குமார் தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், இளம்பெண் போலீஸில் புகார் அளிக்கவே சஞ்சய்குமார் தலைமறைவாகியுள்ளார்.