பாபநாசம் - Papanasam

தஞ்சை: சாலை மறியல் போராட்டம்.. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

தஞ்சை: சாலை மறியல் போராட்டம்.. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வையைசேரி செல்ல அணுகு சாலை மின்விளக்கு வசதி மயான சாலை இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 7 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அணுகுச்சாலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் போராட்டக் குழு திட்டமிட்டபடி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என கூறி அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிவிட்டனர்.  இக்கூட்டத்தில் துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பிரிதிவிராஜ், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஸ்ரீநிதி, இன்ஸ்பெக்டர் உஷா, சப்-இன்ஸ்பெக்டர் மகரஜோதி, போராட்டக் குழு சார்பில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி, விவசாய அணி மாவட்டத் துணைச் செயலாளர் குணசேகரன், அமுமுக மாவட்ட இளைஞரணிப் பாசறை செயலாளர் அசோக்குமார், விவசாயிப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் தமிழ்வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా