பாபநாசம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பூத் கிளை பொறுப்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி ஆலோசனை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற பூத் கிளைக் கழக பொறுப்பாளர்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு பணி நடைபெற்றது. இதில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டு பூத் கிளைக் கழக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை.சண்முகம்பிரபு, மாவட்ட அவைத்தலைவர் ராம்குமார் உட்பட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.