உலக குத்துச்சண்டை கோப்பை தொடரின் முதல் சுற்று பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த 130 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 70 கிலோ எடை கொண்ட பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் ஹிதேஷ் போட்டியிட்டார். 5-0 என்ற கணக்கில் பிரான்சின் மகான் டிராரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒடெல் கமாராவுடன் மோதவுள்ளார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.