கரும்பில் நோய் தாக்குதலால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை..

70பார்த்தது
பாபநாசம் பகுதியில் கரும்பில் நோய் தாக்குதலால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை.

விவசாயம் சார்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் பாதிக்கப்பட்ட கரும்பு வயல்களை பார்வையிட்டு, புதிய ரகங்களை அறிமுகம் செய்ய கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம், உம்ளாபாடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வந்த நிலையில்,

தற்போது 100-க்கனக்கான ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கரும்பில் மஞ்சள் நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் செய்த முதலீடுகளை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும்,

பாதிக்கப்பட்ட கரும்பு வயல்களை விவசாய அறிவியல் விஞ்ஞானிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும்,

நவீன புதிய
கரும்பு ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி