பாபநாசம்: ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயம் உற்சவ திருவிழா

76பார்த்தது
முக்கிய வீதிகளின் வழியாக, ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன் ஆலயம் 42-ஆம் ஆண்டு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன், ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். 

அதனை தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கருக்காவூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி