கொடநாடுகொலைவழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

83பார்த்தது
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விவசாய பிரிவு செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் பிரேம் நாத் பைரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் மலர் வேந்தன், கழக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தின் இறுதியில் நடிகையும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான சி. ஆர். சரஸ்வதி பேசினார். அப்போது ஸ்டாலின் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடைநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறினார் அதன்படி கொடநாடு கொலை, ஒ கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் தம்பி விஜய்க்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் யாரும் கட்சி ஆரம்பித்து உடனே ஆட்சியை பிடிக்க முடியாது பல போராட்டங்களை கடந்து தான் ஆட்சியை பிடிக்க முடியும் இவ்வாறு பேசினார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முடிவில் நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி