கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: சிற்ப, குத்துவிளக்கு தொழிற்பூங்கா அமைக்க கோரிக்கை

கும்பகோணம் நகர விஸ்வகர்ம சமூக சங்கம், தமிழக கம்மாளர் முன்னணி சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் பத்மநாபன் தெருவில் நடைபெற்றது. சங்க செயலர் மு. மாரிமுத்து தலைமை வகித்தார், கம்மாளர் முன்னணி செயலர் டி. ஆர். ரமேஷ் முன்னிலை வகித்தார். கராத்தே ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோயம்புத்தூரில் 126 கோடிக்கு தொழில் பூங்கா அமைக்க உத்தரவிட்டு அதை உடனே செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விஸ்வகர்ம சமுதாய மக்களுக்கு முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், கும்பகோணத்திலும் சிற்பம், குத்துவிளக்கு தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.  விஜயகுமார் நன்றி கூறினார், கூட்டத்தில் தலைவர் இரா. பெரியசாமி, இணைச்செயலர் த. ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் சு. சுபாஷ், க. ராஜேந்திரன், வலங்கை சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా