சிவகங்கை - Sivaganga

ஜேசிபி டிரைவரை தாக்கிய வனத்துறை; ஒப்பந்ததாரர் மனு

சிவகங்கை மாவட்டத்தில் பாரதபிரதமர் கிராமப்புறச் சாலைதிட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாற்றிய ஜேசிபி டிரைவரை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில முதல் நிலை ஒப்பந்ததாரர் கந்தசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சிரகத்தில் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஒப்பந்ததாரர் கந்தசாமி கூறுகையில்: நான் கன்ஸ்டிரக்ஸன் மூலம் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராமப்புறத் திட்டத்தின் கீழ் (இலுப்பக்குடி முதல் கருங்காலக்குடி)வரை வேலைக்கான வேலை உத்தரவை பெற்று உரிய அதிகாரி மேற்பார்வையில் கடந்த 20 நாட்களாக வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எனது டிரைவரிடம் வனத்துறை அலுவலர் இதே போல சாலை பணியை செய்யுமாறு கூறி உனது ஒனரை எனது மேல்அதிகாரியை பார்த்து கப்பம் கட்ட சொல் என்று கூறி சென்றுள்ளார்கள். அதற்கு நான் எனது டிரைவரிடம் நாம் உதவிப் பொறியாளர் முன்னிலையில் தான் வேலை பார்க்கிறோம். நீ வேலையை பார் எனக் கூறிவிட்டேன். வனத்துறை அதிகாரிகள் எனது டிரைவரை தரக்குறைவாக பேசியும் தாக்கியும் எனது ஜேசிபி வாகனத்தையும் சட்டத்திற்கு புறம்பாக எடுத்துசென்றுள்ளனர். எனவே இச்செயலை செய்த வனத்துறை அதிகாரிகள் பெத்தபெருமாள் பாண்டியராஜன் மற்றும் ஒருவர் மீதும் இச்சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்த உயர்நிலை அதிகாரி மீதும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

வீடியோஸ்


சிவகங்கை