சிவகங்கையில் நாளை(செப்.10) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வருகைதருவதையொட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாக்கடைகளை சரி செய்வதும், சாலைகளை செப்பணிடும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் போடப்பட்ட திருப்பத்தூர் சாலையினை, சாலை பணியாளர்கள் தார் கலவையைக் கொட்டி மேலோட்டமாக பேட்ச் ஒர்க் பார்த்துள்ளனர்.
பின்னர் கனரக வாகனமான ரோலர் கொண்டு சமப்படுத்தாமல் சென்றதால், சாலையில் கற்கல் சிதறி விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சாலை தரம் இல்லாமல் இருந்ததை மறைக்க, பெயரளவில் செப்பெனிடும் பணியினை மேற்கொள்ளும் வீடியோ இன்று(செப்.9) இரவு சுமார் 7 மணி அளவில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது