வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே கொல்லங்குடியில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. நினைத்த காரியம் நிறைவேறுவதும், தவறு செய்தவர்களை தண்டிக்கும் இப்பகுதி மக்களின் நீதிபதியாக கொல்லங்குடி காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார்.

இங்கு காசு வெட்டி போட்டால் நீதி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும்.

கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழாவான இன்று (செப்.,08) காலை மங்கல இசை, மண்டப சாந்தி, கோபூஜை நடைபெற்று சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வளம் வந்து கோயில் விமானங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து தீப ஆராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவினை காளையார் கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி