சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (செப்.,12) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து குறைந்த பட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை ரூ.10 லட்சம் உதவியாளர்களுக்கு ரூ.5லட்சம் வழங்க வேண்டும், பத்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.