சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நுழைவாயில் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
வேளாண்மை துறையில் மானாவாரி சாகுபடிக்கான தனித்துறை அமைத்திட வேண்டும். அரசே தானியங்களை கொள்முதல் செய்திட வேண்டும். பொது விநியோக அங்காடிகளில் ஊட்டச்சத்து மிகுந்த இந்த தானியங்களை விற்பனை செய்திட வேண்டும். மானாவாரி உற்பத்தி தானியங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் விலை உயர்த்தியும். தமிழக அரசு இதற்கு இணையான ஊக்கத்தொகையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
மானாவாரி சாகுபடி தகுந்த ரகங்களுக்கு ரூ. 10,000 மானியமாக வழங்கிட வேண்டும். தானிய சேமிப்பு கிடங்குகளை அமைத்திட வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(செப்.9) மதியம் சுமார் ஒரு மணி வரை கண்டன கோஷங்களை எழுப்பினர்.