சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கைகாட்டி கற்காத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்த டெய்லர் வேலை பார்க்கும் ராமநாதன் என்பவரது மனைவி சித்தாள் வேலை பார்க்கும் ஆனந்தவள்ளி வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மாவட்ட தலைமை மருத்துவர் அருள்தாஸ் மற்றும் அவரது குழுவினர் அவரது வயிற்றுக்குள் பெரிய அளவிலான கர்ப்பப்பை கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
அறுவை சிகிச்சையை மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே செய்ய முடிவு செய்து ஆனந்தவள்ளிக்கு
தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்தகுமார், பெண்கள் மருத்துவர் நிபுணர் டாக்டர் கீர்த்திகா , மயக்க வியல் நிபுணர் டாக்டர் கௌரி, பட்டம் மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து இந்த மருத்துவ குழுவினர் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சுமார் 6 கிலோ கட்டியை வெளியே எடுத்தனர். தற்பொழுது வலியில்லாமல் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இளம்பெண் ஆனந்தவள்ளி சிகிச்சை பெற்று வருகிறார்.