சிவகங்கை: ஒரு மாவட்டத்தில் 700 கொலைகளுக்கு மேல் நடந்துள்ளது; எச் ராஜா

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா இவ்வாறு கூறினார். மேலும், அமைதியான மக்கள் வாழக்கூடிய காரைக்குடியிலும் இன்று கொலை நடந்துள்ளது என்று எச். ராஜா கூறினார். தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு கொலைகள் நடப்பதாகவும், இதற்காக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர் பேசாத போது, அதற்கான கூட்டம் நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய எச். ராஜா, இது தேவையில்லாத கூட்டம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி