முத்துமாரியம்மன் கோயிலில்பால்குடம் உற்சவம்

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா மிகவும் புகழ்பெற்றது.
இந்த திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திருவிழா காரைக்குடி மட்டும் அல்லாமல் தமிழ் நாடு முழுவதும் உள்ள மக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும்.
மேலும் இந்த திருவிழாவில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து கூட பக்தர்கள் வருகை தருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னதாகவே பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் அக்னி சட்டி எடுத்து காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர் தற்போது கூட்டம் அலைமோதி வருவதால் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி