10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

67பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் தலைமையில் நடைபெற்றது. உண்ணாவிரதம் போராட்டத்தில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதி மொழியான பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம் என்ற உறுதிமொழியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பை இந்த ஆண்டே வழங்க வேண்டும், ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் MRB செவிலியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை வரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி