சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா முஹமது (65 ) இவர் வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் மலைத்தேன் கூடு ஒன்று இருந்துள்ளது இந்நிலையில் இன்று வேப்ப மரத்தை வெட்டியுள்ளனர் அப்போது தேன்கூட்டில் இருந்து கிளம்பிய மலைத்தேன் குளவிகள் ராஜா முகமது (65) அவரது மனைவி காதர் பாத்(60) மகன் சகுபர் அலி (36) மற்றும் மரம் வெட்டிய நபர் காளிமுத்து (70) ஆகியோரை கொட்டியது இதில் படுகாயம் அடைந்த அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜா முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த மூன்று நபர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்