சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குட பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த பால்குட பெருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தினமும் அருள் பாலித்து வருகிறார் திருவிழாவை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் இன்று இரவு திருப்பத்தூர்ரான் இசைக் கச்சேரி நடைபெற்றது இதில் புது நிகழ்ச்சியாக கிங்காங் வேடமனிந்தும் ஹல்க் வேடம் அனிந்தும் திடீரென வந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர் கிங்காங் ஹல்க்கும் சண்டை போடுவது போன்ற காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது