சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் மனோ என்ற மனோஜ் குமார் இளைஞரை இருசக்கர வாகனத்தில் இடித்து காரில் வந்த மூன்று பேர் அரிவாளால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர் அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பி சென்ற காரை துரத்திச் சென்றனர் கார் நாச்சியாபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சென்ற பொழுது காவல்துறையினர் பின்னால் விரட்டியதை பார்த்தவுடன் காரை சிறாவயல் காட்டுபகுதியில் விட்டு விட்டு குற்றவாளிகள் தப்பி சென்ற போது பாறையில் தடுக்கி விழுந்து கொலையாளிகள்
குருபாண்டியனுக்கு கை முறிவு மற்றொரு குற்றவாளி சக்திவேல் என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் ஒரு கோவில் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்த உள்ளனர்.