மீன்பிடி திருவிழா -மீன்களை அள்ளிய கிராம மக்கள்

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் சுணை கண்மாயில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது, விவசாய தேவைக்கு கண்மாய் நிரை பயன்படுத்தியதாலும் கோடை வெயிலால் தண்ணீர் குறைந்து வந்தது இதனால் கண்மாயில் உள்ள மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்று புற கிராமங்களுக்கும் மீன்பிடி திருவிழா குறித்து அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை காளாப்பூர் சூரக்குடி, கள்ளம்பட்டி, புதுப்பட்டி, மூவன்பட்டி போன்ற சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருகை தந்த கிராம மக்கள் தாங்கள் தயராக வைத்திருந்த ஊத்தா கூடை , கச்சா , கொசுவலை , அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க காத்திருந்தனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்டு துண்டு வீசியதும் மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் கரையோரம் காத்திருந்த மக்கள் மின்னல் வேகத்தில் ஊத்தா கூடையுடன் ஒடி சென்று கண்மாயில் துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை மக்களுக்கு விரா, கட்லா, கெண்டை கெழுத்தி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி