தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்"

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகள் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய சங்க இலக்கியத்தில் வாணிபம் என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பரமசிவம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கரு. முருகன் நோக்க உரை ஆற்றினார். சங்க இலக்கியத்தில் வாணிபம்" என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பேராசிரியர் சிவேசன் சிவானந்த மூர்த்தி உரை நிகழ்த்தினார். பின்னூட்டக் கருத்தினை பேராசிரியர் முனைவர் ரெத்தினேஸ்வரி பேராசிரியர் இளங்கோ, பேராசிரியர் காளிமுத்து, பேராசிரியர் தவமணி ஆகியோர் வழங்கினர். நிறைவில் பேராசிரியர் முனைவர் கண்மணி நன்றி கூறினார்.
கருத்தரங்கில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். சிவேசன்
சிவானந்த மூர்த்தி
"உலகப்பொருளாதாரச் சிந்தனை சங்க காலத்தின் விதை"
"தமிழ் உயிருள்ள மொழி உலகமொழியாகும். சங்க இலக்கியத்தில் வணிகமும் வணிக நடைமுறைகளும் தமிழருடைய அடையாளமாகும். தமிழன் இருக்கிற இடத்தில் தமிழை யாராலும் அழிக்க முடியாது. காரணம் இலக்கியத்தில் வாழ்வியலைப் பதித்து வைத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி