சாட்டையால் அடித்து பேய் விரட்டும் சாமியாடி

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ். புதூர் ஒன்றியம் கே. புதுப்பட்டியில் பெரியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் ஒன்று கூடி கரக எடுப்பு விழா நடைபெற்றது. 18 பட்டி கிராமத்திற்கு கரகம் எடுத்து சென்று அருள்வாக்கு கூறி வந்தனர். இந்நிலையில் கரகாட்டத்துடன் சாமியாடிகள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உறுமி மேளம், தாரை தப்பட்டையுடன் கரகம் எடுப்பு விழா கும்மியாட்டத்துடன் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து கிராம வழக்கப்படி பேய் பிடித்ததாக நம்பப்படும் பெண்கள் சாட்டையுடன் நிற்கும் சாமியாடிகள் முன்னிலையில் வந்தனர். பெண்களை சுற்றி சாமியாடி வட்டமாக எல்கை கோடு போட்டு பேயிடம் இந்த பெண்ணை விட்டு விலகி விடு என கூறி சாட்டையை சுழற்றி சாமியாடிகள் அடித்து விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கானோர் கூடி கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி