சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமானோர் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் இந்த கோவிலுக்கு ஏராளமான காவலர் குடும்பங்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில் அந்த கோவிலை ஒட்டி மேடை அமைத்து அதில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.