
சங்ககிரி: கொலை செய்த கூலிப்படையினர் 7 பேர் கைது
சங்ககிரி அருகே கடந்த 30ஆம் தேதி நியூட்ரிஷன் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து 7 பேரை நேற்று முன்தினம் சங்ககிரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனுக்கும், ராணிக்கும் சொத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே ராணி தன்னுடைய மகன் அரவிந்தனுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து வந்துள்ளார். பெண் பார்க்கும் இடத்துக்கு ராஜேந்திரன் சென்று திருமணத்துக்கு தடை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் அரவிந்தனுக்கு திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது. இது ராணிக்கும், அரவிந்தனுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அரவிந்தன் தன்னுடைய நண்பரான கூட்டுறவு வங்கியில் தற்காலிக டிரைவராக பணிபுரியும் மனோஜ்குமாரிடம் தந்தையை கொலை செய்ய கூறியுள்ளார். அதற்காக ரூ.4 லட்சம் பேரம் பேசப்பட்டு முதல் கட்டமாக ரூ.3 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற்றுக்கொண்ட மனோஜ்குமார் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 30ஆம் தேதி மதியம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேந்திரனை மனோஜ்குமார் கூட்டாளிகளான வெல்டிங் பட்டறை தொழிலாளி சிவசங்கர் (29), மெக்கானிக்கல் என்ஜினீயர் சசிகுமார் (21), நடன கலைஞர் லோகபிரகாஷ் (21), கல்லூரி மாணவர் கவுதம் (21), ரகுநாத் (23), டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் கொலை செய்ததாக தெரிவித்தனர்.