சங்ககிரி - Sankari

சேலம்: 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்கு

சேலம்: 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்கு

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி நிறைமாத கர்ப்பமாகி இருந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிறுமிக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே காதல் கணவர் சண்முகம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாககொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு கடந்த 15-ந் தேதி சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்ககிரி அனைத்து மகளிர்போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காதல் கணவர் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా