சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் மேற்குபுறம் அமைந்துள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வெள்ளப் பிள்ளையார் திருக்கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் குகன், சித்ரா மணிகண்டன், சிவகுமார், மதுரை மேகம் ஆகிய ஐந்து பேரையும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாயின் கமிஷனர் ராஜா தலைமையில் செல்லப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் வாக்குப்பெட்டி வைத்து அறங்காவலர்களான ஐந்து பேரும் வாக்குச்சீட்டு முறையில் ஸ்டாலின் அவர்களை அறங்காவல் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்து அறநிலையத்துறையின் ஜாயின் கமிஷன் ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.