சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி 10வது வார்டு பகுதியில் குடிநீர் கட்டணம் வசூல் செய்ய சென்ற பொதுப்பணி மேற்பார்வையாளர் செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்கள் ஊருக்கே தண்ணீர் கிடையாது என மிரட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதெமக்கள் தங்கள் வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனவும் அதனால் குடிநீர் கட்டணம் செலுத்த முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரிகளை படம் பிடித்த அப்பகுதி இளைஞர்களின் செல்போனை பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் தடுத்து மிரட்டல் விடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது